PMK Youngsters new Maaveeran kanal arasan
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி என்னும் கிராமத்தில் ஜெகநாதன் என்கிற விவசாயிக்கு மகனாக பிறந்தவர் குருநாதன் என்று அழைக்கப்படும் குரு. இவருக்கு இவருக்கு மனைவி லதா, விருதாம்பிகை மற்றும் கனல் அரசன் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
1986-ல் காடு வெட்டியில் ஆரம்பகால தி.மு.கவின் கிளைச் செயலாளராக இருந்த குரு. தி.மு.கவில் வன்னியர்களுக்கு அவர்களது பகுதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் திமுகவிலிருந்து விலகினார்.

1980களின் ஆரம்பத்தில் டாக்டர் ராமதாஸ், வடமாவட்டங்களெங்கும் இருந்த பல்வேறு சங்கங்களை ஒருங்கிணைத்து ஜாதி சங்கத்தைத் தொடங்கினார். ஜாதி சங்கத்தை விரிபடுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் அகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் ஜாதி சங்கத்தில் இனைக்கிறார்கள். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகிக்றார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார்.
இதனையடுத்து, மக்கள் தொகை அடிப்படையில் ஜாதி வாரி இடஒதுக்கீடு வேண்டுமென்று கேட்ட ஜாதி சங்கத்தினர். 1987ஆம் ஆண்டு ஒரு பெரிய போராட்டம் நடத்த முடிவு செய்தார்கள். வடமாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு சாலை மறியல் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டம் தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த போராட்டத்தில் அப்போது குரு ஒட்டுமொத்த அவர்களின் ஜாதியினர் மத்தியில் கவனம் பெற்றார்.

பாமகவிற்கு பக்கபலமாக இருக்கும் ஜாதிகட்சியை ஒருங்கிணைத்து செயல்பட்ட ஜெ.குரு 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பிறகு நடந்த 2006 சட்டமன்ற தேர்தல், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். மீண்டும் , 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர்களாக இருந்த தலித் எழில்மலை, பொன்னுசாமி மற்றும் பண்ரூட்டி வேல்முருகன் உள்ளிட்ட பாமகவின் முக்கிய உள்ளிட்ட கட்சியைவிட்டு சென்றதும். அரண்மனைபோல உருவாக்கி வைத்திருந்த பாமக ஆட்டம் கண்டது. அப்போது, பாமக கோட்டையின் தூணாக இருந்து கட்டிக் காப்பாற்றினார். ராமதாசுக்கு பக்கபலமாக இருந்த ஜெ.குரு மீது நம்பிக்கை வைத்தார்.

இதனையடுத்து, மாமல்லபுரத்தில் சித்திரை பவுர்ணமிக்கு நடத்தப்படும் ஜாதி மாநாட்டில் அவர் பேசும் அந்தப் பேச்சானது, அந்த சாதி இளைஞர்களை தட்டி எழுயப்பும் விதமாக அவரது பேச்சு பிரசித்து பெற்றவை. இரண்டுமுறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர், பங்கேற்கும் கூட்டங்களில் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவதால், 'வன்னிய இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார்' என்று தெரிவித்து அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்படியே பல ஆண்டுகளாக கேஸ் சுமது வாழ்க்கையை ஓட்டிவந்த குரு, கடந்த 2 வருடங்களாக ‘நுரையீரல் மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிப்பு நோயால்’ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

உடல்நிலை பாதிப்பு அதிகம் ஆனதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவுக்கு உலகத் தரமான மருத்துவம் அளிக்கப்பட்டது. ஒருவாரத்துக்கு முன்பு குருவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவர்கள் அவரைத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து குருவைக் காப்பாற்றினார்கள். கடந்த 25-ம் தேதி மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குருவின் மறைவை அடுத்து, திருப்பூர், சேலம் மாவட்டம் துவங்கி வடதமிழகம் முழுவதும் குருவின் மறைவுக்கு அவரது ஜாதி சங்கம் சார்பில் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் ராமதாசே நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் அரங்கேறியது. குருவின் சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டிருந்த அவரது ஜாதி இளைஞர்கள், குருவின் மகனான கனல் அரசனை திறந்த வேனின் அழைத்து வந்தனர்.

அப்போது இவர்தான் எங்களின் அடுத்த மாவீரன் குரு என கோஷங்கள் எழுப்பினர். இதை பாமக நிறுவனர் ராமதாசுக்கு இணையான செல்வாக்கு குருவுக்கு இருந்திருப்பதை கனல் அரசனை தங்களது ஜாதிக்கு தலைவனாக்க போராடுவதை பார்த்த அவர் அப்போதுதான் உணர்ந்தார். பாமகவின் ஆணிவேராக இருந்த ஜெ.குருவின் மகன் கனல் அரசனை, பாமக இளைஞர்கள் தோள்களில் தூக்கிப் பிடிப்பதை அன்புமணியும் வெகுவாக ரசித்தார்.
