பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்த பிளஸ் 2 மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவர்களுக்கு நிதி வழங்கினார். 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பாலியல் பலாத்காரத்தால் இறந்த பிளஸ்-2 மாணவியின் குடும்பத்தினருக்கு உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர், மாணவியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது தர்மபுரி மாவட்ட அதிமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவியை மாணவியின் பெற்றோரிடம் அவர் வழங்கினார். அந்த நேரத்தில் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். 

இதைத்தொடர்ந்து சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.