Asianet News TamilAsianet News Tamil

கவனத்திற்கு!! பிளஸ் 2 பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்.. எப்போது வெளியீடு..? புது அறிவிப்பு..

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன் படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Plus 2 General Election Result Released on 20th June
Author
Tamilnádu, First Published Jun 16, 2022, 1:09 PM IST

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன் படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 23 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் புது அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

மாநில பாடத்திட்டத்தில் கீழ் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பிற்கு நாளையும் (ஜூன் - 17) மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் தேர்வுத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட திட்டமிட்டப்படி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திடீரென்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வெளியிடும் தேதியை மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் படி, வரும் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வும் 12 மணியளவில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை வெளியாகவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க: முக்கிய செய்தி !! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் தேதி மாற்றம்.. ஜூன் 20 ஆம் தேதி வெளியீடு..

Follow Us:
Download App:
  • android
  • ios