plastic pots are banned in Tamil Nadu

சுற்று சூழலை மாசுபடுத்துவதில் முதல் இடத்தில் இருக்கிறது பிளாஸ்டிக். மண்ணை மாசுபடுத்துவதோடு நில்லாமல் அப்பாவி வாயில்லா ஜீவன்களும் கூட, இந்த பிளாஸ்டிக்கினால் படாதா பாடு படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது அதனை இன்னும் விரிவுபடுத்தி, தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சுற்று சூழலை மாசு படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை, மக்களின் கடுமையான போராட்டத்திற்கு பிறகு, நிரந்தரமாக மூடிய தமிழக அரசு, அடுத்ததாக எடுத்திருக்கும் ஒரு அதிரடி முடிவுதான் இந்த பிளாடிக் பொருள்களுக்கான தடை.

அப்படி பிளாஸ்டிக் பொருள்களை பொது இடங்களில், ஒட்டு மொத்தமாக தவிர்ப்பது என்பது மிகவும் கடினமான செயல் தான். இந்த சவாலான காரியத்தை அரசு எப்படி நடைமுறைப்படுத்த போகிறது? என்பது இனி தான் தெரியும்.

பால்,தயிர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்கு மட்டும் இந்த தடையில் விதி விலக்கு இருக்கிறது. பொது இடங்களில் எல்லாவித பிளாஸ்டிக் பொருள்களுக்கும் தடை என்று ஆகும் போது, பிளாஸ்டிக் குடங்களையும் இனி பயன் படுத்த முடியாது. இந்த தடை அதற்கும் பொருந்தும். இதனால் இனி தண்ணீர் பிடிக்க பிளாஸ்டிக் குடங்களை எடுத்து செல்ல முடியாது.