பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதிலாக புதிய 5௦௦, மற்றும் 2௦௦௦ ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும், பழைய நோட்டுக்களை ஒரு சில நாட்களுக்கு மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள், விமாநிலையங்கள், பெட்ரோல் பங்குகள், ரயில்நிலையங்களில் மட்டும் மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
பழைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து அதனை மாற்ற பொது மக்கள் அதிகமாக பெட்ரோல் பங்குகளில் திரண்டனர்.
பெட்ரோல் பங்குகளிலும் போதிய சில்லறை இல்லாததால் அங்கும் சில்லறை மாற்ற முடியாமல் இருந்ததால், பொதுமக்களுக்கும், பெட்ரோல் பங்கு ஊழியர்களுக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல் பங்குகளில் மேலும் 3 தினங்களுக்கு, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.களிலேயே சரியான சில்லறை கிடைக்காத நிலையில், பெட்ரோல் பங்குகளிலும் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பெட்ரோல் பங்குகளுக்கு சென்றால் சில்லறை இருந்தால் மட்டும் பெட்ரோல் தரப்படும் இல்லையெனில் பெட்ரோல் தர முடியாது என கராராக கூறுகின்றனர். அதுமட்டுமின்றி சில்லறை இல்லாததால் பெட்ரோல் பங்குகள் மூடி வைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் செல்வராஜ் கூறும்போது,
வங்கிகள் மூலமாக தங்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக, 50000 ரூபாய்க்கு 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை, பெற்று தர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை என்று எச்சரிக்கை விடுத்தார்.
