Asianet News TamilAsianet News Tamil

7 மாத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. வேறு வழியில்லாமல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி.!

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த உத்தரவிட்டது. இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

Permission for RSS Rally on April 16... tamilnadu police
Author
First Published Apr 13, 2023, 2:03 PM IST | Last Updated Apr 13, 2023, 2:03 PM IST

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து தமிழ்நாட்டில் ஏப்ரல் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம்  மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்குமாறு கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை போலீசார் அமல்படுத்தவில்லை எனக் கூறி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சுற்றுச்சுவருடன் கூடிய விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

Permission for RSS Rally on April 16... tamilnadu police

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, ஆர்எஸ்எஸ் அமைப்பு திறந்தவெளியில் பேரணி நடத்த உத்தரவிட்டது. இதற்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

Permission for RSS Rally on April 16... tamilnadu police

இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து. தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது. உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து தமிழ்நாட்டில் ஏப்ரல் 16ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்  மற்றும் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios