சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததாக நேற்று செய்தி வெளியானது. இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வேண்டும். கார், லாரி, பேருந்து என ஒவ்வொரு வாகனத்துக்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சாப், லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஓம் ஜிண்டால், பேஸ்புக் பக்கத்தில், 3 நிமிடங்களுக்குமேல் காத்திருந்தால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார். 

இதையடுத்து, சுங்கச்சாவடியில் 3 நிமிடங்களுக்கு மேல் கட்டணம் நிற்கும் வாகனம் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது, நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சட்டத்திருத்தம் 2010-ன் கீழ், நேரம் மற்றும் காத்திருப்பது குறித்து எந்தவித விலக்கும் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலை இணையதளப்பக்கத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.