பத்து ஆண்டுகளுக்கு முன்பு தென் கடைக்கோடியில் வசிக்கும் ஒருவர் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும்
என்றால் அவர் சென்னை வர வேண்டும். பின்னர் பொதுமக்களின் வசதிக்காக மதுரை, கோவை,
திருச்சி போன்ற இடங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் இவ்வசதியை பொதுமக்கள் அனைவரும் பெறும் வகையில் அனைத்து மாவட்ட
தலைநகரங்களிலும் பாஸ்போர்ட் அலுவலகம் திறக்க மத்திய் அரசு முடிவு செய்துள்ளது.

குஜராத்தின் தாகோட் நகரிலுள்ள தபால்நிலையத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தைத் திறந்துவைத்த வெளியுறவுத் துறை இணையமைச்சர்
வி.கே.சிங் இந்த தகவலைத்தெரிவித்தார்.
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும்
வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்.
