சென்னைக்கு வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை.. அலறி அடித்து ஓடிய பயணிகள்- நடந்தது என்ன.?

திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்த ரயியில் திடீரென ஏற்பட்ட புகையால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Passengers were shocked when the train coming to Chennai suddenly saw smoke KAK

ரயிலில் வந்த திடீர் புகை

நீண்ட தூர பயணத்திற்கு ரயில் முக்கிய சேவையாக உள்ளது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக தொடர் ரயில் விபத்துகள் ரயில் பயணிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஒடிசா  ரயில் விபத்தில் சிக்கி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு, மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீவிபத்து போன்றவை ரயில் பயணிகளை கவலையடையவைத்தது. இந்தநிலையில் திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில் ஆவடி அருகே உள்ள நேமிலிச்சேரி அருகே  சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது.  அப்போது ஏசி பெட்டியில் இருந்து வெ்ளை நிறத்தில் புகை வந்தத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு ரயிலில் இருந்து இறங்கி ஓடினர். 

Passengers were shocked when the train coming to Chennai suddenly saw smoke KAK

அலறி அடித்து ஓடிய பயணிகள்

ரயிலில் வெளியான புகையானது ஏசி பெட்டியில் பிரேக் பிடிக்கும் இடத்தில் இருந்து வெளியானது தெரியவந்தது. இதனையடுத்து புகையை  கட்டுப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏசி பெட்டிக்கு செல்லக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்டு 20 நிமிடம் காலதாமதமாக அந்த ரயில் நெமிலிச்சேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்

பொதுவெளியில் ஆபாசமாக பேசினாலோ, பாடினாலோ குற்றமா.? சிறை தண்டனை எத்தனை மாதம் தெரியுமா.? காவல்துறை எச்சரிக்கை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios