500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து நடிகா் விஜய்யின் கருத்து சரியென்றாலும், அவா் சாென்ன புள்ளி விவரம் சரியல்ல என தா. பாண்டியன் தொிவித்துள்ளாா்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு குறித்து, நடிகர் விஜய் நேற்று செய்தியாளா்கள் சந்திப்பில் தனது கருத்தை தொிவித்தாா். அதில் 20% பேர் செய்யும் தவறுகளுக்காக 80% பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறியிருந்தார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், நடிகர் விஜய் சொன்ன புள்ளி விவரம் தவறு என்று தொிவித்துள்ளாா். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் இதுபற்றி கூறுகையில், செல்லாத பணம் குறித்து நடிகர் விஜய் சொல்லியிருப்பது சரி. ஆனால் புள்ளி விவரம் சரியல்ல. நடிகர் விஜய் சொன்னது போல் 20% பேர் இந்த தவற்றை செய்யவில்லை. இந்தியாவில் இந்த தவறை செய்பவர்கள் மிக மிகக் குறைவு. 10 விழுக்காட்டிற்கும் கீழ் இருப்பவர்கள்தான் இதனை செய்கிறார்கள்.

அதிலும் மிகப் பெரிய பணத்தை கடத்துபவர்கள் ஐந்தே ஐந்து விழுக்காடுதான். அவர்கள் யார் என்பது ஆட்சியாளர்களுக்கு கட்டாயம் தெரியும். தெரிந்திருந்தும் அவர்கள் மீது பாயாமல், பொதுமக்களை காயப்படுத்துகிறாா்கள் என்பது குறித்துதான் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டாா்.