pan gutka available in chennai
ஜெயலலிதாவால் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை அனுமதிக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், காவல் துறை உயரதிகாரிகள், உணவுத்துறை அதிகாரிகள் என ரூ.40 கோடி லஞ்சம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கிய தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பான், குட்கா போன்றவை தடை செய்யப்பட்டும் சென்னையில் கடும் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகியுள்ளது.
பான் பராக் விவகாரத்தில் லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் டி.கே.ஆர், ஜார்ஜ் உள்ளிட்டோர் மீது, புகார் எழுந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனை பெரிதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்தியா முழுவதும், பான் பராக் தடை செய்யப்பட்டாலும் தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவு மூலமே பான், குட்கா போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் ஆங்காங்கே பான்பராக், தயாரிப்பவர்கள் விற்பனை செய்பவரகள் சிக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
சென்னையில், பாரிமுனை, யானைகவுனி, போன்ற இடங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட பான், குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, விற்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்றாலும், அவைகள் தடையின்றி போலீசார் துணையுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் உயர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரிகளே பான், குட்கா விவகாரத்தில் சிக்கியிருக்கும் நிலையில் தொடர்ந்து இது போன்று பொருட்கள் பிடிபடுவது, அதை உறுதிபடுத்தும் விதமாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
