Owner of Aasife Biriyani held for cheating financier of over Rs 5 crore
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் கொண்டுள்ள பிரபல ‘ஆஷிப் பிரியானி’ ஓட்டல் உரிமையாளர் ஆசிப் அகமது சவுத்ரி ரூ. 5 கோடி மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது-
சென்னையில் பல்வேறு பகதிகளில் பிரபலமான ‘ஆஷிப் பிரியாணி' ஓட்டலை நடத்திவருபவர் முகமது ஆசிப் சவுத்ரி. இவருக்கு இரு மனைவிகள். இவரது இரண்டாவது மனைவி, நந்தினி.
ஓட்டல் விரிவாக்கம் செய்யவதற்காக கோடம்பாக்கத்தை சேர்ந்த நிதி நிறுவனம் நடத்தி வரும் கோதண்டராமன் என்பவரிடம் ரூ. 5.70 கோடி கடன் பெற்றனர். கடனுக்கு உத்தரவாதமாக, காசோலைகளை வழங்கினர். அவை, வங்கியில் பணமின்றி திரும்பின.
அதையடுத்து, ஆசிப்பிடமும், அவரின் மனைவி நந்தினியிடம் , நிதி நிறுவன அதிபர் கோதண்டராமன் பணம் கேட்டபோது, கூலிப்படை வைத்து, கொலை செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, கோடம்பாக்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையில், இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் இருக்குமாறும், வாங்கிய கடனை தந்து விடுவதாகவும், ஆசிப்பும், அவரது முதல் மனைவி ரம்ஜான் பேகமும், கோதண்டராமனிடம் சமாதானம் பேசினர். அதன்படி, ஆசிப், 2 கோடி ரூபாய்க்கு, கொடுத்த வங்கி காசோலையும்யும், 2 கோடி ரூபாய்க்கு, கொடுத்த டி.டி.யும் பணமின்றி திரும்பியது. வரைவோலை போலி என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்
இதனால், ஆசிப் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும் என கோதண்டராமன் கடந்த ஆகஸ்ட் 12-ந்ேததி போலீஸ் ஆணையரிடம் புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் அடிப்படையில், நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிப்பும், அவரின் மனைவி நந்தினியும் கோதண்டராமனுக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி அருகே அல்லிகுளத்தில் தங்கி இருந்த ஆசிப், அவரின் மனைவி நந்தினி ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கைது செய்தனர்.
