தமிழகத்தில் காலியாக 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழுக்கம் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்நாட்டில்‌ அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ காலியாக உள்ள 13,331 ஆசிரியர்‌ பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில்‌ ஓராண்டுக்குள்‌ நிரப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் பள்ளி மேலாண்மைக்குழு மூலமாக நியமனம் செய்யப்படும் என்றும்‌ முற்றிலும்‌ தற்காலிகமானவை என்றும்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மதிப்பூதியம்‌ மட்டுமே வழங்கப்படும்‌ என்று பள்ளிக்கல்வி ஆணையர்‌ உத்தரவில்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இந்த பணியிடங்களில், பள்ளிக் கல்வித்‌துறை மூலமாக ஆசிரியர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலமாக ஆசிரியர்கள்‌ அந்த பணியிடங்களில்‌ வேலை செய்ய விருப்பப்பட்டலோ தற்காலிமாக நியமிக்கப்படும்‌ ஆசிரியர்கள்‌ உடனடியாக பணியில்‌ இருந்து நீக்கப்படுவார்கள்‌ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக அடிப்படையில்‌ நியமிக்கப்படும்‌ இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.10,000, முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம்‌ ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஜூலை 11ம் தேதி நடைபெறும்அதிமுக பொதுக்குழுவிற்கு அனுமதி வழங்க கூடாது..! இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார் ஓபிஎஸ்

பொதுத்தேர்வுக்கு மாணவர்கள்‌ தயார்‌ செய்வதற்கும்‌, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3 ஆம்‌ வகுப்பு வரை எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும்‌ இடைநிலை ஆசிரியர்கள்‌ பணியிடங்களை நிரப்பிடவும்‌ மாற்று ஏற்பாடு செய்ய வேண்டி உள்ளதாக அந்த உத்தரவில்‌ கூறப்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கு மாதம்‌ ரூ.12,000 வரை சம்பளம்‌ வழங்கவும்‌ உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்யவதற்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கும் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்பவும் மாற்று ஏற்பாடு செய்ய இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இடங்களில் தற்காலிகமாக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.12,000 வரை சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: Agnipath Recruitment 2022: இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!