Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain : தமிழகத்தில் மழை தொடருமா? ஆரஞ்ச் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

orange alert for 10 districts in tamilnadu
Author
Tamilnadu, First Published Dec 31, 2021, 6:16 PM IST

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தமிழகம்,புதுவையில் வடகிழக்குப் பருவமழை நடப்பாண்டு இயல்பை விட 59% அதிக மழை பெய்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நேற்று வரை 45 செ.மீ. அளவிற்கு மழை பெய்யும் என கணித்திருந்த நிலையில் 71 செ.மீ. அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 59% அதிக மழை அளவாகும். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக மழை பொழிவு இருந்தாலும் நவம்பர் மாதம் முதலே மழையின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியது.

இன்னும் 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் மழை..! 2015 ஆம் ஆண்டை மிஞ்சிய  2021..! கணித்த வெதர் மேன் | chennai Rain updates

அப்பொழுதே 70 சதவிகிதம் அளவிற்கு மழை கூடுதலாக பெய்ததாக வானிலை மையம் அறிவித்திருந்தது. டிசம்பர் மாதத்தில் சற்றே ஓய்வெடுத்த மழை இறுதியில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்து விட்டது. சென்னையில் பல பகுதிகளில் 20 செமீக்கு மேல் மழை அளவு பதிவாகியுள்ளது. ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழையால் சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 59% அதிக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 10 மணி நேரம் மழை விடாமல் பெய்துள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில்தான் அதிக மழை பெய்துள்ளது. அங்கு மாட்டு 237.10 மிமீ மழை பெய்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 230.80 மிமீ மழை பெய்துள்ளது. மேற்கு மாம்பலத்தில் 220 மிமீ மழை பெய்து உள்ளது. இந்த 3 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.

orange alert for 10 districts in tamilnadu

இன்று காலை முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தற்போது மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios