ஜன.23 வன்முறையில் காவலர்கள் வன்முறையில் தீவைப்பு சம்பவங்களில் ஈடுபட்டது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 110 வது விதியின் கீழ் ஓபிஎஸ் அறிவித்தார்.

காவல் துறையை சேர்ந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள், தீ வைத்தல், வன்முறை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டது போன்று சமூக வலைத் தளங்களில் பரவியுள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் தொடர்பாக, சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் சென்னை மாநகர காவல் துறையின் கணிணி வழி குற்றப் பிரிவினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவை கணிணி மற்றும் தடயவியல் வல்லுநர்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவ்விசாரணையின் முடிவில் காவல் ஆளிநர்கள் மேற்கூறிய சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.
