ஓபிஎஸ்க்கு அதிகரித்து வரும் செல்வாக்கு… கடுப்பாகும் சசிகலா தரப்பினர்..

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதே நேரத்தில் அதிமுக வை ஜெயலலிதாவின் தோழி சசிகலா கைப்பற்றியதையடுத்து அவர் முதலமைச்சராகவும் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ஜனார்தனன், துனை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் ஓபிஎஸ்க்கு நாளுக்கு நாள் பெருகி வரும் ஆதரவு அவரது ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் சசிகலா தரப்பினருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது..

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக தலைதுக்கியுள்ள பிரச்சனைகளை ஓபிஎஸ் மிகத் திறமையாக சமாளித்து வருகிறார் எனவும், அமைதியான முறையில், தினமும் கோட்டைக்கு வந்து, அலுவலகப் பணிகளை பார்ப்பதோடு, சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்றும் சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

வர்தா புயல் சென்னையை தாக்கியபோது புயல் போல் .செயல்பட்டு ஒரு சில நாட்களுக்குள் நகரை சகஜநிலைக்கு கொண்டு வந்தார்.

விவசாயிகள் பிரச்னை தலைதுாக்குவதை அறிந்ததும், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசினார். அவர்களின்கோரிக்கைகளை ஏற்று, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார்.

பருவமழை பொய்த்ததால், சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை சமாளிக்க ஆந்திரா சென்று அம்மாநில முதலமைச்சர்ர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, தண்ணீர் கிடைக்க வழி செய்தார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, மாணவர்கள், இளைஞர்கள், தமிழகம் முழுவதும் போராட்டத்தில்ஈடுபட்டனர். உடனடியாக டில்லி சென்று, பிரதமரை சந்தித்தார்.

அவரது ஆலோசனையின்படி, அங்கேயே தங்கியிருந்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெற்று வந்தார்.அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதும், சட்டசபை கூட்டத் தொடரிலேயே, அதை சட்டமாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டார்.

அவரது அமைதியான நடவடிக்கை காரணமாக, அவருக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

அதேபோல் ஓபிஎஸ்சின் நடிவடிக்கைக்ய குறித்து திமுக செயல் தலைவத் ஸ்டாலினும் வெகுவாக பாராட்டி வருகிறார். தொடர்ந்து ஓபிஎஸ் அவரது செயல்பாடுகளால் மக்கள் மனதில் உயர்ந்து வருகிறார். ஆனால் முதலமைச்சராக முயற்சி செய்து வரும் சசிகலா தரப்பை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.