old lady begging in vadapalani temple



பிரசித்தி பெற்ற வடபழனி கோவிலில்  பிச்சை எடுக்கும் ஒரு வயதான  பெண்மணி, மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன்   நடித்தவர்  என்பது  எத்தனை பேருக்கு தெரியும் .

இவருடைய  பெயர்   ஜமுனா டான்சராகவும், நடிகையாகவும் இருந்துள்ளார் . நடிகர் சிவகுமார் ஜெயலலிதா  நடித்த  காலத்தில், இவர்களுடன் இணைந்து  நடித்தவர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆனால்  இன்று இந்த  பெண்மணி யாரும் இல்லாத  அநாதையாக வடபழனி கோவிலில் பிச்சை எடுத்து வருகிறார் .

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மோட்டார் சுந்தரம் பிள்ளை, சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் குரூப் டான்சராகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனும் இணைந்து நடித்தவர் ஜமுனா என்பது   குறிப்பிடத்தக்கது . ஜமுனாவின் கணவர் ஒரு மேக்கப் மேனாக  வேலை பார்த்து  வந்துள்ளார் .

தான் ஒரு சிறந்த  டேன்சராக  இருந்த ஜமுனா , தன்  கணவர் இறந்தபின் யாருடைய  ஆதரவும்  இல்லாமல் இந்நிலைக்கு  தள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார் .சில ஆண்டுகளுக்கு முன்   நடிகர் கமல்  மற்றும் ரஜினி  காந்த்  இந்த  பெண்மணிக்கு  உதவியதாகவும் தெரிவித்துள்ளனர் .

இந்நிலையில்,  நடிகர் விஷால்  தனக்கு  உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை   வைத்துள்ளார்   ஜமுனா