Non bailable arrest warrant against leading Tamil actors including Suriya Sarathkumar Sathyaraj for not appearing in connection with defamation case
கடந்த 2009ம் ஆண்டு பூனைக்கண் நடிகை புவனேஸ்வரி கொடுத்த பட்டியலின் அடிப்படையில் மிகப்பெரிய விபச்சார நடிகைகள் என்ற பட்டியலை தமிழ் நாளிதழ் ஒன்று வெளியிட்டது. இந்தச் செய்திக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் அந்த நாளிதழ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அப்போதைய நடிகர் சங்க தலைவராக இருந்த சரத்குமார் அளித்த புகாரில் குறிப்பிட்ட பத்திரிக்கையின் செய்தி ஆசிரியர் லெனின் கைது செய்யபட்டார்.
மேலும் நடிகர் சங்க கட்டடத்தில் நடிகர் நடிகைகளின் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
இதில், பேசிய சூர்யா பிரியாணிக்கும் ,500 ரூபாய் காசுக்கும் அலைந்து கொண்டு வருபவர்கள் தான் பத்திரிக்கையாளர்கள் என்று பேசினார்.
விவேக் பேசுகையில், பத்திரிக்கையாளர் வீட்டு பெண்களின் படங்களை தாருங்கள், பிரா , உள்ளாடைகளுடன் கிராபிக்ஸ் செய்து போடுகிறேன் என்று பேசினார்.
ஸ்ரீபிரியா பத்திரிக்கையாளர்களை தரக்குறைவான ஆங்கிலத்தில் திட்டி பேசினார்.
தனது மகளுக்கு ஸ்ரீபிரியா தான் ஆதர்ஷன வழிகாட்டி என்று பேசிய சத்தியராஜ் ஸ்ரீபிரியா பேசியது ஆங்கிலம் என்பதால் அனேகம் பேருக்கு தெரியாது அதை மொழிபெயர்த்து தமிழில் திட்டுகிறேன் என்று தமிழில் திட்டினார்.
சரத்குமார் பேசுகையில், இந்த செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும் சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்... ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால் நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது. இந்தப் பிரச்சினைகள் வராமல் தடுக்க விரைவில் நாங்களே ஒரு புதிய பத்திரிகை துவங்குவோம். இதுதவிர, இம்மாதிரி அவதூறுகளைச் சந்திக்கவென்றே ஒரு வக்கீலை சங்கத்தில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
