திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை கால்நடை மருத்துவப்பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து இறைச்சிக்கூடங்களும் மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை நகரில் ஆடு, மாடு, இதர இறைச்சி விற்பவர்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து இறைச்சிக்கூடங்கள், பல்பொருள் அங்காடிகள்  மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்ய கூடாது எனவும், அதனை மீறி விற்பனை செய்தால் இறைச்சிகள் பறிமுதல் செய்வதோடு கடைகளின் லைன்சென்சு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்