“எல்எல்ஆர் வேண்டாம்......லைசன்ஸ் தான் வேண்டும்” – உச்சக்கட்ட உறுதியில் இளைஞர்கள் ....!

 ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களுமே ஒன்று திரண்டுள்ளனர் மெரினாவில், ராப்பகலாக, தொடர்ந்து இன்றோடு ஐந்தாவது நாளாக , ஜல்லிகட்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவிது வரும் இளைஞர்கள் பெண்கள், மாணவர்கள் அனைவரும் ,மெரினாவிலேயே தங்கி , உயிர் போனாலும் பரவாயில்லை என , முழு ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள் இளைஞர்கள்.

இன்றுடன் ஆறு நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக் அரசால் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு , இன்று காலை ஜல்லிக்கட்டு நடைப்பெறுவதாக இருந்தது. ஆனால் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. அதாவது, போரட்டக்காரர்கள் , ஜல்லிகட்டுகாக நிரந்தர தீர்வு தான் எங்களுக்கு வேண்டுமே தவிர , அவசர சட்டம் வேண்டாம் என உறுதியக தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது ஆறுமாத கால அவகாசம் உள்ள எல்எல்ஆர் வேண்டாம்,லைசன்ஸ் தான் வேண்டும் என போராட்டகாரர்கள் உறுதியாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஒட்டு மொத்த இளைஞர்களின் எண்ணமும் ஒருமித்த கருத்தாகத்தான் இருக்கிறது.