ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என தமிக உணவு துறை தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பதற்கு நவம்பர் 1 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கு ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் உணவு பொருட்கள் வழங்கப்படாத என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், தமிக உணவு துறை இன்று விளக்கம் அளித்தள்ளது. 

ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும், ஆனால் இதற்காக காலக்கெடு எதுவும் இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.