no connection with karnataka congress govt in sasikala problem

பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறையில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தொடர்பில்லை என டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய, டிஐஜி ரூபா, சிறை முறைகேடுகளை வெளியே கொண்டு வந்த பிறகு எனக்கு யாரும் மிரட்டல் விடுக்கவில்லை என தெரிவித்தார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், முதலில் தொடர்புடைய சிறை அதிகாரிகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்
சசிகலாவுக்கு கூடுதல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது எனறும் தெரிவித்தார்.

இந்த முறைகேட்டில் மாநில அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அவ்வாறு எந்த தகவலும் எனது கவனத்திற்கு வரவில்லை என்றும் டிஐஜி ரூபா தெரிவித்தார்.