Asianet News TamilAsianet News Tamil

AAA படத்திற்கு தடை இல்லை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

no ban for AAA movie
no ban for AAA movie
Author
First Published Jun 22, 2017, 12:29 PM IST


அன்பானவன்  அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இதைதொடர்ந்து இந்த படத்திற்காக தயாரிப்பாளர் ராயப்பன் தன்னிடம் 25 லட்ச ரூபாய் கடன் வாங்கியதாகவும், அவர் பணத்தை திருப்பி தராததால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தடை விதிக்க வேண்டும் எனவும், பைனான்சியர் ரமேஷ் என்பவர் படத்துக்கு தடை கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனை பதிலளிக்க கோரி உத்தரவிட்டது.

இந்நிலையில், வாங்கிய பணத்தை திருப்பி தருவதாக ராயப்பன் உறுதியளித்ததால் அன்பானவன்  அசராதவன் அடங்காதவன் படத்திற்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios