அடுத்த 2 நாளைக்கு பிச்சுவாங்கப் போகுது மழை… 5 மாவட்ட மக்களே உஷார் !! மழையால் நனையப் போகும் மலைகள்…

Next two days there will be heavy rain 5 districts in tamilnadu
Highlights

அடுத்த 2 நாளைக்கு பிச்சுவாங்கப் போகுது மழை… 5 மாவட்ட மக்களே உஷார் !! மழையால் நனையப் போகும் மலைகள்…

தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்குத் தொடர்ச்சி மலையை  ஒட்டியுள்ள  மாவட்டங்களில் கடந்த 2 இரண்டு மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.  நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன.

இந்நிலையில் தென் மேற்கு பருவமழை தற்போது மீண்டும்  தீவிரமடைந்துள்ளது. இதனால் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

loader