தென்மேற்கு வங்ககடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும். 

இன்று மழைக்கு வாய்ப்பு :

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், ஈரோடு, நாமக்கல்,கரூர் என தமிழகம் முழுக்க ஆங்காங்கே சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்ககடல் பகுதியில் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறியிருந்தது.

சென்னை வானிலை மையம் :

இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றினை வானிலை மையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 'அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்ளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. 

இதையும் படிங்க : ”ரஷ்யாவுக்கு ஜோசப் ஸ்டாலின்.. தமிழகத்துக்கு மு.க ஸ்டாலின்.!” கெத்தான வரவேற்பை கொடுத்த கேரளா !