நியூஸ் ஜெ  தொலைக்காட்சியின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து வைத்தனர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி 'நியூஸ் ஜெ' தொலைக்காட்சி சேனல் இன்று தொடங்கப்பட்டது. இதற்கான லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்து 
வைத்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு இரண்டு பிளவாக பிரிந்த அதிமுக, ஜெயா டிவி உள்ளிட்ட அத்தனை தொடர்பு சேனல்களும், அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழும், டிடிவி தினகரன் 
தரப்புக்கு சென்றது. 

இதனால் புதிய நாளேடு மற்றும் செய்தி சேனலை தொடங்கும் நிலை அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘‘நமது அம்மா’’ என்ற நாளிதழ் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது ‘நியூஸ் ஜெ’ என்ற செய்திச் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான லோகோ அறிமுகம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 'நியூஸ் ஜெ' சேனலின் Logo,App,WEBSITE ஆகியவற்றை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.