ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என தெரிவித்தார்.

மேலும், பிளஸ்-1, பிளஸ்டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுவிட்டது என்றும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்றபின் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தை பொருத்தவரை, ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இருப்பதில் இருந்து சற்று மேன்மைபடுத்தி தரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.