Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து அச்சுறுத்தும் வானிலை… நவ.13 அன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!!

நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

new barometric depression forms on nov.13
Author
Chennai, First Published Nov 10, 2021, 12:18 PM IST

நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,  அதன்பிறகு இது வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில்,வங்க கடலில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதியில் வரும் நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

new barometric depression forms on nov.13

எனினும், மழை பாதிப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை என்ற போதிலும் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி முழுமையாக கடந்து சென்ற பின்னரே நவம்பர் 13 ஆம் தேதி உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியினால் ஏற்படும் மழை குறித்த தகவல் தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சென்னை நோக்கி நகரும் என்பதால் மக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில், வரும் 13 ஆம் தேதி மேலும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது மக்களிடையே நிலவும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் வங்கக் கடலில் தற்போது உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தென் மேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்துக்கு அருகே கரையை  கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

new barometric depression forms on nov.13

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருப்பூண்டியில் அதிகளவாக தலா 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஏற்கனவே வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அச்சுறுத்தி வரும் நிலையில், வங்கக் கடலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நவம்பர் 13 ஆம் தேதி உருவாகும் புதிதாக காற்றழுத்த தாழ்வு அடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான பிறகே, அது மேற்கு வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெய்த மழையின் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்குள் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, வானிலை அடுத்தடுத்து அச்சுறுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே முன்னர் பெய்த மழையால் தேங்கிய நீரை வெளியேற்று பணி தீவிரமாக நடைபெற்றும் வரும் நிலையில் மழை தொடர்ந்தால் நீரை வெளியேற்றும் பணியில் சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios