Asianet News TamilAsianet News Tamil

நெல் ஜெயராமன் மரணம் … இன்று அதிகாலை உயிர் பிரிந்தது...

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள  அப்பல்லோ  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை 5.30 மணிக்கு காலமானார். 

Nel Jayaraman expired in appollo
Author
Chennai, First Published Dec 6, 2018, 7:18 AM IST

நெல் ஜெயராமன் என்ற  பெயரை தெரியாத விவசாயிகளும் இருக்க முடியாது. இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தீவிர விசுவாசியாக அவரது கருத்துகளை அப்படியே பின்பற்றி வந்தவர். அதனால் தான் விவசாயிகளால் ஓரங்கட்டப்பட்டு அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் விதைகளை தேடிச் சென்று சேகரித்து 169 பழைய ரகங்களை கொண்டுவந்து நெல் திருவிழா நடத்தி விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி தமிழகம் கடந்தும் பாரம்பரிய நெல் ரகங்களை விதைதவர். 

Nel Jayaraman expired in appollo


பாரம்பரிய உணவால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்ற உயரிய நோக்கத்தில் சேகரித்து வழங்கினார். ஆனால் நோய் வரக்கூடாது என்று நினைத்தவருக்கு கொடிய புற்றுநோய் சிறுநீரகத்தில் வந்தது நெல் ஜெயராமனுக்கு. கொடிய நோய் வந்த போதும் தனது பணியை செய்து கொண்டே இருந்தார்.

Nel Jayaraman expired in appollo

உடல் நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். இந்த தகவல் அறிந்து முழு மருத்துவச் செலவையும் நான் ஏற்கிறேன் என்று அதற்காண முன்பணத்தையும் மருத்துவமனைக்கு செலுத்தினார் நடிகர் சிவகார்த்திகேயன். அவரது மகன் படிப்பு செலவையும் ஏற்றார். அதன் பிறகு நடிகர்கள், அரசியல் தலைவர்கள் நெல் ஜெயராமனை மருத்துவமனையில் பார்த்து நலம் விசாரித்து உதவிகளும் செய்தனர். 

Nel Jayaraman expired in appollo
நேற்று மாலை அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. ஆனால்  தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, பாலகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் நெல் ஜெயராமனை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்த நலம் விசாரித்தனர், பின்னார் தமிழ அரசு சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த  2 ஆண்டுகளாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நெல் ஜெயரமான், அதற்காக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,. 

Follow Us:
Download App:
  • android
  • ios