Asianet News TamilAsianet News Tamil

நோயாளியின் உடலுக்குள் புகுந்த ஊசி... கர்ப்ப ஸ்த்ரீக்கு ஏற்பட்ட கொடுமை! அரசு மருத்துவமனையின் அலட்சியம்!

Needle passed into the patient body - Government hospital negligence
Needle passed into the patient body - Government hospital negligence
Author
First Published Jun 15, 2018, 12:19 PM IST


நர்சின் அலட்சியத்தால் நோயாளிக்கு செலுத்தப்பட்ட ஊசி உடைந்து, அவரும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் சசிகலா. இவரது கணவர் வடிவேல் கூலித் தொழிலாளி. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு பெண்
குழந்தைகள் உள்ளர்.

சசிகலா, தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சசிகலா, உடல்நலக் குறைவு காரணமாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு
சென்றார்.

அங்கு அவருக்கு மருத்துவர் சிகிச்சை அளித்தப்பின், அவருக்கு ஊசி மூலம் மருந்து செலத்த பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அங்கு வேலை பார்த்து வரும்
நர்ஸ், சசிகலாவுக்கு அலட்சியமாக ஊசி போட்டுள்ளனர்.

இதனால், ஊசியின் பாதிமுறை உடைந்து சசிகலாவின் கையின் உள்ளே சென்று விட்டது. இது தெரியாமல் சசிகலா வீட்டுக்குச் சென்றுவிட்டார். நாளடைவில்
அவர் கையில் கடும் வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் சென்று காண்பித்துள்ளார்.

அப்போது அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, உடைந்த ஊசி உள்ளே இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட சசிகலாவும் அவரது கணவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பிறகு, அவர்களை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஊசியும் அகற்றப்பட்டு விட்டதாக கூறி, இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர்.

தற்போது சசிகலா மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அருகே
உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று காட்டியுள்ளனர்.

சசிகலாவுக்கு, எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது நெஞ்சுப் பகுதியில் உடைந்த ஊசி இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்ட சசிகலா அதிர்ந்துபோனார். இது தொடர்பாக சசிகலாவின் கணவர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். 

இது குறித்து வடிவேல் கூறும்போது, எந்த வழியும் இல்லாத ஏழைகள்தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு நடக்கும் அலட்சியத்தால் இப்ப என்
மனைவி உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஏதாவது ஒன்று என்றால் என் குழந்தைகளைக் யார் காப்பாற்றுவது. இந்த விஷயத்தில் தமிழக அரசு
தலையிட்டு என் மனைவியையும், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் உயிரோடு காப்பாற்றுங்கள் என்று கதறும் காட்சி பார்ப்பவர்களின் மனதை
கணக்கச் செய்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios