இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் சென்னை மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 85.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல்இன்று காலை மரணம் அடைந்தார்.

சென்னை சி.ஐ.தி நகர் இல்லத்தில் ரஞ்சிதம் அம்மாளின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரிசயல் கட்சித் தலைவர்கள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தா.பாண்டியன், முத்தரசன், உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து நல்லக்கண்ணுக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ரஞ்சிதம் அம்மாளின் இறுதிச் சடங்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் நாளை நடைபெறவுள்ளது. ரஞ்சிதம் அம்மாளின் உடல் இன்று தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகிறது.