தருமபுரி

தருமபுரியில் தாய் மற்றும் மூன்று மகன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். நால்வரின் உடல்களும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. தாயின் உடல் கல்லுடன் சாக்குப்பையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நதியா மற்றும் மூன்று மகன்களின் வாய்கள் துணியால் கட்டப்பட்டு இருந்தது. நதியாவின் உடல் சாக்குப்படை ஒன்றில் கல்லுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. இதனால் இது கொலையாக இருக்குமோ? என்ற கோணத்தில் காவலாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்பேரில் நதியாவின் கணவர் லோகநாதன் மற்றும் அவரது தந்தை சண்முகம், தாய் தேவகி ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவலாளர்கள் தீவிரமாக விசாராணை நடத்தி வருகின்றனர்.

தாய் மற்றும் மூன்று மகன்கள் உடல்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவ இந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.