புதுச்சேரி அருகே கடல் சீற்றத்தால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்த விழுந்துள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கஜா புயாலாய் தொடர்ந்து, ஏற்பட்டு உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வருகிறது. 

அதில் குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும், கடலோர பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடற்சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கேற்றார் போல் கடற்சீற்றம் அதிகமாக இருந்ததால், புதுச்சேரி அடுத்த பொம்மையார் பாளையத்தில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளை கடல் அடித்து சென்றது.

இதனால் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது. பாதிக்கப்பட மக்கள் வீடுகள் இன்றி தவித்து  வருகின்றனர். இதனை தொடர்ந்து மீனவ கிராமத்தை பாதுகாக்க வலியுருத்தி கிழக்கு கடற்கரைச்சாலையில் மீனவர்கள் சாலை மறியல் செய்தனர். இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
.