Money and silk sari theft from wedding house call from Malaysia take action to collector

அரியலூர்

கல்யாண வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் பீரோவில் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் பட்டு புடவையை திருடி சென்றுவிட்டார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரது இரண்டாவது மகன் செந்தில்குமாருக்கு நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

இதனால் மாப்பிள்ளை வீட்டார் அனை வரும் நலுங்கு வைப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு மண்டபத்திற்கு சென்றனர். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேச் சென்றுள்ளனர். 

பின்னர், பீரோவில் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் பட்டு புடவை போன்றவற்றை திருடிச் சென்றுவிட்டார். அதன்பின்னர் மாப்பிள்ளை வீட்டார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளே சென்றுபார்த்தபோது பணம் மற்றும் பட்டு புடவையை மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின்பேரில் செந்துறை காவலாளர்கள் விசாரணை நடத்தினர். ஆனால், காவலாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 

இந்த நிலையில் இதையறிந்த மலேசியாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை உறவினர் ஒருவர் அரியலூர் ஆட்சியரை தொலைபேசியில் தொடர்புகொண்டு செந்துறையில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடை பெறுகிறது என்று கூறியுள்ளார். 

மேலும், காவலாளர்கள் நட வடிக்கை எடுக்கவில்லை என்றும் புகார் கொடுத்து கெத்து காட்டியுள்ளார். 

அதற்கு, "இதுகுறித்து உரிய விவரங்களை அனுப்பி வையுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும்" என்று ஆட்சியர் கூறினார். ஆட்சியரிடம் புகார் தெரிவிக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.