Moderate rain in 2 days

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 2 நாட்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பிற பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த மண்டலம், புயல் சின்னமாக உருவெடுத்து வடக்கு ஆந்திரா கடற்கரை மற்றும் ஒடிசாவை நோக்கி நகர்ந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 2 நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டமாக காணப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறினார்.

குறிப்பாக மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலர், சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாக தமிழக அணைகளில் நீர் நிரம்பி உள்ளது.

மழை காரணமாக தென்பெண்ணை மற்றும் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.