Asianet News TamilAsianet News Tamil

மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்.!மீண்டும் புழல் சிறையில் அடைப்பு-ஜாமின் கிடைக்காமல் தவிப்பு

உடல்நிலை பாதிப்பால் ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி, சிகிச்சை முடிவடைந்து புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். 
 

Minister Senthil Balaji discharged from Omanturar Hospital KAK
Author
First Published Dec 7, 2023, 8:48 AM IST

புழல் சிறையில் செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களை கடந்த பிறகு கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜி வீட்டில் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறை, இரவோடு இரவாக செந்தில் பாலாஜியை கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி பாதிப்பால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு இருதய பகுதியில் அடைப்பு இருந்ததையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

Minister Senthil Balaji discharged from Omanturar Hospital KAK

செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிப்பு

சிகிச்சை முடிவடைந்ததையடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் பல முறை ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஜாமின் மனுவானது தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தது. இதனால் செந்தில் பாலாஜி கடும் விரக்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து மீண்டும் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி  அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் பித்தப்பையில் கல் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதற்காக சிகிச்சை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காவல்துறை பாதுகாப்போடு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படியுங்கள்

ஆவின் பால் கிடைக்காமல் தவிக்கும் பொதுமக்கள்.! கள்ள சந்தையில் விற்றால் பால் முகவர் உரிமம் ரத்து- மனோ தாங்கராஜ்

Follow Us:
Download App:
  • android
  • ios