NEET EXAM : கருணை மதிப்பெண் பெற்ற 1563 நபர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை- மா.சுப்பிரமணியன்
கருணை மதிப்பெண் 1563 மாணவர்களின் பட்டியலை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் , நீட் தேர்வால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலாக உள்ளது என மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள்
நீட் தேர்வு முடிவுகளில் எண்ணற்ற முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் கருணை மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் 1563 மாணவர்களின் பட்டியலை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நீட் தேர்வில் தொடர்ச்சியாக முறைகேடுகள் நடைபெற்ற வருவதாகவும் , நீட் தேர்வால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் மருத்துவக் கனவு சீரழிவதால் தொடர்ந்து தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்ட 23 மாணவர்களுக்கு தடை , 40 பேரின் முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பது நீட் தேர்வு முடிவுகளில் எண்ணற்ற முறைகேடுகள் நடந்திருப்பதை உறுதி செய்கிறது.
இது எப்படி சாத்தியம்.?
கடந்தாண்டுகளை காட்டிலும் நடப்பாண்டில் முழு மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது , தேசிய தேர்வு முகமை 67 பேர் முதல் மதிப்பெண் பெற்றதாக தெரிவித்துள்ளது , வழங்கப்பட்ட மதிப்பெண்களில் பல இடங்களில் குளறுபடி நடந்துள்ளது. தேர்வர் ஒரு கேள்வியை தேர்வு செய்து பதில் அளித்து இருந்தால் நான்கு மதிப்பெண் , தவறான மதிப்பெண் அளித்திருந்தால் ஒரு தவறான மதிப்பெண்ணும் சேர்த்து 5 மதிப்பெண் குறைந்திருக்கும் என்ற நிலையில் கேள்வி விட்டிருந்தால் 716 கிடைக்க வேண்டும் ஆனால் 718 எப்படி கிடைத்தது . அரியானா மாநிலத்தில் மட்டும் ஒரே தேர்வு மையத்தில் அடுத்தடுத்த பதிவின் கொண்டவர்கள் 8 பேர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளனர் , இது எப்படி சாத்தியமானது .
நீட் தேர்வில் கருணை மதிப்பெண்
ருணை மதிப்பெண் எப்படி தரப்பட்டதாக சொல்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை தெரிவிக்கின்றது, ஆனால் நீட் தேர்வுக்காக உச்ச நீதிமன்றத்தில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்படவில்லை CLAT தேர்வுக்கு கொடுத்த தீர்ப்பை NEET தேர்வுக்கு பொருந்தும் என கருதி எப்படி கருணை மதிப்பெண் வழங்கியிருக்க முடியும். மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. கருணை மதிப்பெண் பெற்றதாக கூறப்படும் 1563 மாணவர்களின் பட்டியலை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் , நீட் தேர்வால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்க நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பது தமிழக அரசின் தொடர் வலியுறுத்தலாக உள்ளது .
தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை
கருணை மதிப்பெண் பெற்றவர்களில் ஆறு பேர் முழுமதிப்பென் பெற்றுள்ளனர் அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் குஜராத் போன்ற மாநிலங்களில் சேர்ந்தவர்களாவர் , கருணை மதிப்பெண் பெற்ற 1563 நபர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை , கருணை மதிப்பெண் வழங்குவதில் கூட தமிழகத்திற்கு பாரபட்சம் காட்டப்படுகிறது . எனவே பல்வேறு முறைகேடுகள் நடந்த இந்த நீட் தேர்வை முழுமையாக கைவிட வேண்டுமென அமைச்சர் மா சுப்ரமணியம் தெரிவித்தார்
நீட் தேர்வு 2024: கருணை மதிப்பெண்கள் ரத்து... மறுதேர்வு - மத்திய அரசு தகவல்!