minister dindigul srinivasan in governor swearing ceremony

ஆளுநர் பதவியேற்பு விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் காதில் பஞ்சுவைத்தபடி கலந்துகொண்டார்.

சர்க்கரை நோய் மற்றும் காது புண் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு காது புண் இன்னும் முழுமையாக சரியாகாதபோதிலும் ஆளுநர் பதவியேற்பு விழாவில் காதில் பஞ்சுடன் கலந்துகொண்டார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆளுநர் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடியாமல் காதில் புண் இருந்தும்கூட பஞ்சு வைத்துக்கொண்டு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழாவில் கலந்துகொண்டார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்த்தது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பேசி கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.