Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள் அலர்ட்.. பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - அமைச்சர்

பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
 

Minister Anbil Magesh Press Meet
Author
Chennai, First Published Dec 8, 2021, 9:32 PM IST

பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துக்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே, 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று அறிவிக்கபட்டிருந்தது. மேலும் கொரோனா ஊரடங்கு பிறகு கடந்த 18 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

Minister Anbil Magesh Press Meet

 ஊரடங்கு காரணமாக, செப்டம்பர் 1 வரை பள்ளி மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நேரடியாக பொது தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கபட்டிருந்தது. மேலும் பொதுதேர்வுக்கு முன்பு மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் டிசம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தபடும் என்று பள்ளிகல்விதுறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.  

அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வாக அரையாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை தாமதமாக திறந்ததால், பாடத் திட்டத்தில் உள்ள சில பாடங்கள் குறைக்கப்பட்டு, அவை மட்டும் தேர்வில் இடம் பெறும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் காலாண்டு தேர்வுக்கு பதில், முதல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறன் ஆய்வு செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த மாதம் அரையாண்டு தேர்வு நடத்த வேண்டிய நிலையில், அந்த தேர்வானது திருப்புதல் தேர்வாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கால அட்டவணைப்படி தேர்வுகள் நடத்தபடும் என தெரிவித்தார். 

Minister Anbil Magesh Press Meet

மேலும் சமீபத்தில் ,ஒமைக்ரான் தொடர்பாக பள்ளிகளில் தளர்வு குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் ஒமைக்ரான் தொடர்பாக பொதுசுகாதார துறையிலிருந்து பள்ளிகல்வித்துறைக்கு எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்றும் கூறினார். மேலும் வருகிற பொதுமுடக்கம் தொடர்பான அலோசனை கூட்டத்தில், மருத்துவ குழுவினருடன் கலந்து ஆலோசித்து , ஒமைக்ரான் குறித்து விவாதிக்கபடும். இதில் எடுக்கபடும் முடிவின் அடிப்படையில் பள்ளிகளில் தளர்வுகள் குறித்து  ஆலோசிக்கபடும் என்று தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios