Milk Shortage in day after tomorrow-Milk Agents

மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர்கள் அனைவரும் தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளனர். எனவே முதல் நாளே பால் வாங்கி வைத்துக் கொள்ளும்படி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி கூறும்போது, தமிழகத்தில் மே 5 ஆம் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு வணிகர்கள் அனைவரும் தங்களின் கடைகளுக்கு விடுமுறை அளிக்க உள்ளனர்.

இதனால், பால் முகவர்கள் அன்றைய தினம் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து 100 சதவீத பால் கொள்முதல் செய்து அவற்றை இருப்பு வைத்து விநியோகிப்பது இயலாத காரியம்.

எனவே, பால் முகவர்கள் 5 ஆம் தேதி பால் நிறுவனங்களிடம் இருந்து, 50 - 60 சதவீத பாலை கொள்முதல் செய்ய மாட்டார்கள். எனவே அன்று பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆகவே, பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படுமூ பாலை, முதல் நாளே முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக்கொள்வது நல்லது என்று அவர் கூறியுள்ளார்.