கர்நாடக அணைகளில் நீர்திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் சரிந்துள்ளது. ஆனால், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாளாக பெய்து வரும் மழையால் நேற்று முன்தினம் 355 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 1,061 கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீர்திறந்து விடப்படுகிறது. நீர்மட்டம் நேற்று 44.65 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 14.60 டிஎம்சியாக உள்ளது.
