தமிழகத்தில் இன்னும் மூன்று நாட்களில் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .  தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது , அன்றுமுதல்  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வந்தது.  கடந்த மாதம் சென்னையில் வலுபெற்ற பருவமழை கன மழையாக வெளுத்து வாங்கியது. 

இந்நிலையில் மழை ஒய்ந்து  சில நாட்களாக வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது .  இது குறித்து  இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் , இன்னும்  மூன்று தினங்களில் பருவமழை காலம் முடிவடையும் என்றார்.  அதாவது  31ம் தேதி வரை மட்டுமே பருவமழை இருக்கும் என்ற அவர்,   அதன் பிறகு தொடர்ந்து கடல்காற்று நீடித்து வந்தாலும் 31ஆம் தேதி வரை மட்டுமே பருவமழையாக எடுத்துக் கொள்ளப்படும் என்றார் .  ஜனவரி மாதத்தில் மழை பெய்தால் அது குளிர்கால மழையாக கருதப்படும் என்றார் .

 

வட மாவட்டங்களை விட, இந்தாண்டு  டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை அதிகமாக பெய்துள்ளது என்றார்.  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சென்னையில் 17 சதவீதம் மழை குறைவு எனவும் அப்போது  தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர்,  தமிழகம்  மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும்  வலிமண்டல சுழற்ச்சி காரணமாக தமிழகம மற்றும்புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்,   

கடந்த 24 மணி நேரத்தில் லேசாக பெய்த மழையால் பதிவான மழையின்  அளவானது குன்னூரில் 0.3 மி.மீ மழையும், காரைக்காலில் 0.2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது. சென்னயை பொறுத்து வரை வானம் ஒரளவுக்கு  மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்சமாக 31டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றார்.