Meerakumar press meet at chennai...she not answer about rajiv gandi murder case
நீங்கள் குடியரசுத் தலைவரானால் ராஜிவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலைக்கான பத்திரத்தில் கையெழுத்து போடுவீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் மீரா குமார் தெறித்து ஓடினார்.
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.


இதனைத் தொடர்ந்து மீரா குமார், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழநாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மீரா குமார், தான் குடியரசுத் தலைவரானால், இந்தியாவில் அனைத்து துறைகளும் வெளிப்படையாக செயல்பட வழிவை செய்யப்படும் என கூறினார்.

ஊடகத்துக்கான சுதந்திரத்துக்கு போராடுவேன் என்றும் ஏழை, எளிய மக்கள்,தலித் மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்றும் மீரா குமார் தெரிவித்தார்.
தமிழகம் வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாரம்பரியமிக்க தேசம், அரசியல் அறிவு மிகுந்த மக்கள் உள்ள மாநிலம்.தமிழகம் என்றுமே தன் உள்ளத்தில் மிக நீங்கா இடம் பெற்றுள்ளளது என கூறினார்.
நீங்கள் குடியரசுத் தலைவரானால் , ராஜிவ்காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்று சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்கான பத்திரத்தில் கையெழுத்து போடுவீர்களா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல், மீரா குமார், ஸ்டாலின், திருநாவுக்கரசர் ஆகியோர் அங்கிருந்து தெறித்து ஓடினார்.
