வாழ்வியல் பயிற்சி என போலியாக பயிற்சி அளித்து 1.5 கோடி ரூபாய் ஹீலர் பாஸ்கர் சுருட்டியதாக புகார் வந்ததால் கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் மாவீரன் பிரபாகரனை அடியாள் என பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கோவையில், நிஷ்டை வாழ்வியல் மையத்தின் சார்பாக வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கான வழிமுறை பயிற்சி முகாம் நடத்த இருந்த ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சுகப்பிரசவம் குறித்த அச்சத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. 

கர்ப்பிணிகளுக்கு சுகபிரசவ பயிற்சி, வாழ்வியல் பயிற்சி என போலியாக பயிற்சி அளித்து 1.5 கோடி ரூபாய் ஹீலர் பாஸ்கர் சுருட்டிய தகவலும் வெளியாகியுள்ளது.கோவை அருகேயுள்ள கோவைப்புதூரில் நிஷ்டை வாழ்வியல் பயிற்சி ஆலோசனை என்ற பெயரில் தனியார் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு மருத்துவம், யோகா, வாழ்வியல் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பை ஹீலர் பாஸ்கர் எடுத்து நடத்தி வருகிறார்.  இவர் இனிய சுக பிரசவம் ஒரு வரம் என்ற தலைப்பில், வரும் 26-ம் தேதி ஒரு நாள் இலவச பயிற்சி வழங்குவதாக அறிவித்தார். 

இவர் மீது, ஜான்சன் என்பவர், மருத்துவ நடைமுறைக்கு எதிராக பயிற்சி அளிக்க உள்ளதாகவும், இதற்காக தன்னிடம் ரூ.5 ஆயிரம் பெற்றதாகவும் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை அதிரடியாக கைது செய்தனர். இவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஹீலர் பாஸ்கர் கைதை அடுத்து சீமான், ஹீலர் பாச்கருக்காக குரல்கொடுக்கும் இந்த சமயத்தில், சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு கூட்டத்தில் மக்கள் மத்தியில் மைக்கில் பேசும் ஹீலர் பாஸ்கர், ஸ்ரீலங்காவில் நல்ல ஆட்சி நடந்துகொண்டிருந்தது.  பிரேமதாசா போன்ற நல்ல தலைவர்கள் ஆட்சி செய்துகொண்டிருந்தார்கள். 

இவங்க என்ன பண்ணுவாங்க அந்த நாட்டுக்குள்ளே போய் எல்லா பிசினசையும் அவங்க  பேருக்கு கேப்பாங்க,  அவர்களுக்கு குடுத்துகிட்டே இருக்கணும், கையெழுத்து போடணும், அந்த நாட்டோட தலைவர் எப்போ இவர்களை உங்களை உள்ளே விடமாட்டோம் என சொல்கிறாரோ, அப்போது அந்த நாட்டிற்குள் இவர்கள் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். அப்படிதான் சிங்களர்கள் தமிழகர்களுக்கு சண்டை மூட்டிவிட்டு, பிரபாகரனை செலக்ட் பண்ணி கோடிக்கணக்கில் பணம் கொடுத்து, ராணுவ வசதி செய்து கொடுத்தாங்க, அது ஏன் என்றால் இலங்கையில் நல்லாட்சி புரிந்த எல்லோரையும் ஒழிக்கவே பிரபாகரனை தூண்டிவிட்டதாக சொல்கிறார்.

சிகட் சொசைட்டி கண்ட்ரோலில் வந்ததோ அப்போது பிரபாகரனை கொன்று விட்டதாக சொல்கிறார். என இந்த ஹீலர் பாஸ்கர் மக்கள் மத்தியில் இப்படி பேசுகிறார். ஈழத்தமிழர்களின் தலைவனும் மாவீரனுமான பிரபாகரனை ஒரு அமைப்பின் அடியாள் ரேஞ்சிற்கு இந்த டுபாக்கூர் ஹீலர் பாஸ்கர் இப்படி கதைகட்டி விடலாமா? என உலகத்தமிழர்கள் இந்த ஹீலர் பாஸ்கர் மீதும் இவருக்கு சப்போர்ட் பண்ணும்  சீமான் மீதும் கடும் கோபத்தில் உள்ளார்கள்.