நாகப்பட்டினம்

காவல்துறையைக் கண்டித்து நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், அக்கட்சியினர் மீது தடியடி நடத்தி, தொண்டர்களை தாக்குதலுக்கு உட்படுத்திய காவல்துறையைக் கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகேயுள்ள முக்கூட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலர் பி. சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், கலைச்செல்வி, ராசைய்யன், வட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, காபிரியேல் மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் காவல்துறை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.