நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடன் வாங்கி தருவதாக கூறி பெண்களை ஏமாற்றியவர் கிணற்றில் விழுந்த்தில் படுகாயம் அடைந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொல்லிமலை பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து வேலுசாமி சில பெண்களிடம் வங்கி கணக்கு ஓபன் செய்யவும் பாஸ்புக்கிற்கு பணம் கட்ட வேண்டும் என கூறி பணம் கேட்டுள்ளார்.

அதை நம்பி அப்பகுதி பெண்கள் வேலுசாமியிடம் ரூ. 1.50 லட்சம் வரை பணம் கொடுத்துள்ளனர்.

இதைதொடர்ந்து கடன் வாங்கி தராமல் வேலுசாமி பெண்களை நீண்ட நாட்களாக இழுக்கடித்து வந்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று வேலுசாமியின் வீட்டை முற்றுகையிட்டு அவரை தாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதைபார்த்து பயந்து ஓடிய வேலுசாமி தவறி அப்பகுதியில் இருந்த கிணற்றில் விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் வேலுசாமியை பத்திரமாக மீட்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.