8 வயது சிறுமி பலாத்காரம்... இளைஞரை அடித்துக் கொன்ற பெற்றோர்! 

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் காஜியாபாத்தில் உள்ள லொனி பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் அதே பகுதியில் உள்ள 8 வயது சிறுமியை, கடந்த வெள்ளியன்று கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் அச்சிறுமியை அவர் மிரட்டியுள்ளார்.

ஆனால், சனிக்கிழமை காலை ஜிதேந்திராவிடம் இருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நடந்த கொடுமை தொடர்பாக தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களுடன் சென்று, ஜிதேந்திராவை தாக்கியுள்ளனர்.

மரத்தில் கட்டி வைக்கப்பட்டு ஜிதேந்திரா கடுமையாக தாக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த ஜிதேந்திராவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜிதேந்திரா ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, ஜிதேந்திரா கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரைக் கைது செய்துள்ளனர்.

அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் !

அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் ஒன்று கிடந்ததால், அப்பகுதியினர் மக்கள் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது பொற்றையடி கிராமம். இங்கு கிருஷிகுளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில், இன்று காலை ஆணின் பிணம் அரைகுறையாக எரிந்த நிலையில், கிடந்ததை அவ்வழியாக சென்றோர் பார்த்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியுற்ற அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து போலீசார் பாதி எரிந்த நிலையில் கிடந்த அந்த உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 35 வயது மதிக்கத்தக்க அந்த நபரை கொலை செய்தவர்கள், பிளாஸ்டிக் பையில் கொண்டு வந்து போட்டு, பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பியிருக்கலாம் என தெரிகிறது.