கஜா புயல் கரையைக் கடந்தபோது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, கடலூர், கரூர், ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றினாலும், கன மழையினாலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.  மீட்லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன.பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைத்து, இயல்பு நிலை திரும்பிட பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ.1. கோடி நிவாரன உதவி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

கஜா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட  சிவகுமார் குடும்பத்தினர் சார்பில் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். 

இந்நிலையில்,  கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண  பொருட்களை வழங்க உள்ளதாக நடிகர்  விஜய் சேதுபதி அறிவித்துள்ளார். அதேபோல ரூ.10 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வழங்கினார். 

இந்நிலையில், ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும், 2.ஓ பட தயாரிப்பு நிறுவனம், கஜாபுயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஜா புயலால் 7 மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இப்புயலின் மீட்டப்பு நடவடிக்கைக்காகவும், மக்களின் துயர் துடைக்கவும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவும், லைகா குழுமம் ரூபாய் (1,01,00,000) ரூபாய் ஒருகோடியே ஒரு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படுகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.