சாவிலும் பிரியாத காதல் ஜோடி... துப்பட்டாவை கட்டிக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் ரயில் முன் பாய்ந்து கேரள காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அடூரை சேர்ந்த அமல்குமார் என்பவரும், அதேப்பகுதியை சேர்ந்த சூர்யா நாயர் என்ற பெண்ணும் தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது பெற்றோர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்டனர்.
இந்நிலையில் கொல்லத்திலிருந்து கோவை வழியாக செல்லும் ரயிலில் ஏறிய இருவரும், கோவையை அடுத்த போத்தனூரில் இறங்கியுள்ளனர். போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கிய இந்த ஜோடி, காலை 6 மணியளவில் தண்டவாளத்தின் மீது அரை கி.மீ தூரத்திற்கு நடந்து சென்றுள்ளனர். பின்னர் அவ்வாழியாக சென்ற விரைவு ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இறக்கும் போதும் இருவரும் பிரியக்கூட என்பதற்காக உடல் சுடிதார் துப்பட்டாவால் கட்டப்பட்டு இருந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தண்டவாளத்தின் அருகே இளம்பெண் பயன்படுத்திய கைப்பை போலீசார் சோதனை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.