தருமபுரியில் சாலையோரம் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  

கொடைக்கானலில் இருந்து உருளைக் கிழக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லையை நோக்கி லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது அதிகவேகமாக திரும்பிய போது லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்த போது சாலையோரம் தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சின்ராஜ், தூய்மைப்பணியில் ஈடுபட்ட ஊழியர் தங்கவேலு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 ஊழியர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.